(க.கிஷாந்தன்)

 

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை ஆகுரோயா பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

 

தனது வீட்டில் குறித்த இளைஞர் நேற்று மாலை தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர்  29 வயதுடைய பிரியந்த த சில்வா என வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

தற்கொலைக்கான காரணம் காதல் விவகாரமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.