(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

சர்வதேச விசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்காக   தீர்வாக அமையும்.  இலங்கைக்கு மீண்டும் கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்டோரின் துயரம் குறித்தும், ஏனைய சர்வதேச மனித உரிமை, மனித நேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் இலங்கைக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்ற உறுப்பினர் சே. கருணாஸ்  நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். 

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை விவகாரம் குறித்த விசேட உபகுழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.