“தமிழின அழிப்புக்கு நீதி வழங்கும் அதிகாரம் மிக்க மையமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினை நோக்க முடியாது”

Published By: Digital Desk 3

19 Mar, 2019 | 01:01 PM
image

தமிழின அழிப்புக்கு நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட மையமாக நாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினைப் பார்க்க முடியாது என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமார் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் நேற்று திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய காணொளியினூடான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின் இந் நிலைப்பாடு குறித்துப் பேசுவதற்கும் செயற்படுவதற்கும் தாயகத்தில் அரசியல்வெளி இல்லாதிருக்கிறது என்பதனையும் நாம் அறிவோம். 

இருந்தபோதும் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுமுறை குறித்து தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் மக்கள் வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட்டு மக்கள் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் இலங்கைத்தீவின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்படுவதே உரிய ஜனநாயகவழிமுறையிலான அணுகுமுறையாக இருக்கும் என்பதே எமது நிலைப்பாடு.

தனியரசு உருவாக வேண்டும் என விரும்புவோர் அதற்காகக் குரல் கொடுக்கட்டும்.அதனை எதிர்ப்போர் எதிர்க்கட்டும். தமிழ் மக்கள் தமது தீர்ப்பை வழங்கட்டும்.

எந்தச் சிங்களக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழின அழிப்பு முயற்சி தொடர்ந்து கொண்டிருப்பதனை நாம் காண்கிறோம். ஆட்சியாளரின் தன்மைக்கேற்ப இனஅழிப்பு வடிவங்கள் மாறுபடுகின்றனவேயன்றி தமிழின அழிப்புத் திட்டமும் முயற்சியும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழின அழிப்புக்கு நீதி வழங்கும் அதிகாரம் கொண்டமையமாகவும்நாம் மனித உரிமைகள் பேரவையினைப் பார்க்க முடியாது. இதனால் தமிழின அழிப்புக்கான நீதியினை நாம் ஜெனிவாவில் எதிர்பார்க்கவும் முடியாது. ஜெனிவா மனித உரிமைப்பேரவை எமது நீதி நோக்கிய பயணத்தின் ஓர் ஆரம்பப்புள்ளி மட்டுமே. அதன் வரையறைக்குள் நின்று மட்டும் நாம் நீதியினைத் தேட முடியாது.

இதனால்தான் ஜெனிவா மனித உரிமைப்பேரவையிடம் சிறிலங்கா தொடர்பான விடயத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையிடம் கையளிக்குமாறும் தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடமோ அல்லது அதற்கிணையானதோர் அனைத்துலகப் பொறிமுறையிடமோ கையளிக்குமாறும்நாம் ஆரம்பம் முதல் கோரி வந்திருக்கிறோம். எமது இந்தநிலைப்பாட்டுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருகிறது. எனினும் தமிழ் மக்களின் நீதி கோரும் போராட்டம் ஒரு நீண்டதூரப்பயணமாகவே அமையும். அனைத்துலக அரசுகள் தத்தமது நலன்களைத்தாண்டி நீதியின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17