புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பத்திரிகையாளர்களிற்கு என்ன ஆபத்து?

Published By: Rajeeban

19 Mar, 2019 | 11:09 AM
image

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத தடை சட்டம் ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளிற்கு எதிரானது என தெரிவித்துள்ள ஊடக உரிமை செயற்பாட்டாளர்கள் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிற்கு தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் பத்திரிகையாளர்களை கைதுசெய்யமுடியும் என  சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர்  சி  தொடவத்தை  வேண்டுகோள்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக தெரிவித்தே  2015 இல் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை  பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் சிறுபான்மை தமிழர்கள் எதிர்கட்சி அரசியல்வாதிகள் என பலதரப்பட்டவர்களை கைதுசெய்து தடுத்து வைப்பதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் பயன்படுத்தினர் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை  நீக்கமுயலவில்லை மாறாக தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை விட மோசமானவொன்றை கொண்டுவரமுயல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் தங்கள் செய்தி மூலங்களை வெளியிடமறுத்தால் அதற்காக அவர்களை கைதுசெய்யும் அதிகாரத்தை உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுள்ளது என ஊடக உரிமை செயற்பாட்டாளர் தர்மசிறி லங்காபெலி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஊடக சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்துஏற்படலாம் என தெரிவித்துள்ள அவர் பல பத்திரிகையாளர்கள் சிறையிலைடக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் ஊடக அமைச்சராக உள்ளவரிற்கு  ஊடக செயற்பாடுகளிற்கும் ஊடக அமைப்புகளிற்கும் தடைவிதிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது என மனித உரிமை செயற்பாட்டாளர் விரஞ்சன ஹேரத் தெரிவித்துள்ளார்

இது ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அவர் இதனால் கருத்து சுதந்திரத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் பெரும் ஆபத்து ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

இலங்கைக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக புதிய சட்டம் அவசியமில்லை மக்களின் குரலை ஒடுக்குவதற்காகவே  புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டுவரமுயல்கி;ன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08