நாகானந்த கொடிதுவக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு 

Published By: Vishnu

19 Mar, 2019 | 10:18 AM
image

சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவிற்கு 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடையாற்ற இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிரமத நீதியரசர் நளின் பெரேரா. சிசிரடி ஆப்ரு ஆகிய நீதிபதிகளின் இணக்கத்துடன் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன ஜயவர்தனவினால் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இருந்த காலத்தில் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவிற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

2015 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக கடமையாற்றிய விஜித் மலல்கொட முன்னிலையில் சுங்க வழக்கு ஒன்று விசாரண்கை்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விஜித் மலல்கொடவை    அதிருப்திகளை   ஏற்படுத்தும்  உள்ளாக்கும் விதமாக தேவையற்ற கருத்துக்களை தெரிவித்தமைக்கு எதிராக சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவிற்கு எதிராக குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் குறித்த வழக்கின் குற்றவாளியாக சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு இனங்காணப்பட்டு அவருக்கு 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடமையாற்ற நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்