நேபாளத்தின் ஹிமாலயய விமான சேவை இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பித்துள்ளது.

இந்த விமான பயணத்தின் ஆரம்பமாக நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து கடந்த 12ம் திகதி முதலாவது விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிமாலயய விமான சேவை நிறுவனமானது சாதாரண வகுப்பு விமான டிக்கட்டுக்கு 35,000 இல் இருந்து 55,000 வரை கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.