ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி!

Published By: Vishnu

18 Mar, 2019 | 01:19 PM
image

அயர்லாந்து அணியினை 7 விக்கெட்டுக்களினால் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது கன்னி வெற்றியை பதிவுசெய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 

இதில் இருபதுக்கு -20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியதுடன், ஒருநள் தொடர் 2:2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில் இவ் விரு அணிகளுக்கிடையோன ஒரேயொரு போட்டியைக் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 15 ஆம் திகதி உத்தரகாண்டில் ஆரம்பமானது. 

இப் போட்டியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு இது 2 ஆவது டெஸ்ட் போட்டியாகும். முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவுடன் சென்னையில் இடம்பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணிவெற்றிபெற்றுள்ளது.

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 314 ஓட்டங்களை குவித்தது. 

இதையடுத்து 142 ஓட்டத்தினால் பின்னிலையில் இருந்த அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி 288 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 148 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

148 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 29 ஓட்டங்களை பெற்றது.

இரு நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னும் 118 ஓட்டம் தேவை என்ற நிலை நேற்றிருந்தது.

இன் நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க 47.5 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அயர்லாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

இந்த வெற்றியானது சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டியில் பெற்ற கன்னி வெற்றி ஆகும்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் ரஹமட் ஷா தெரிவு செய்யப்பட்டார்.

டெஸ்ட் அந்தஸ்துள்ள அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் முதலாவது கன்னி டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ள அணிகளின் விபரங்கள் வருமாறு,

அவுஸ்திரேலிய அணி தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே கன்னி டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்தது.

இலங்கை அணி தான் விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளின் பின்னரே தனது கன்னி டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்து.

இந்நிலையில் இந்திய அணி தனது கன்னி டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்ய 25 போட்டிகளை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய அணிகளின் விபரங்கள் வருமாறு,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35