பப்புவா நியூ கினியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பப்புவா நியூ கினியாவின் கியுங்கா விமானநிலையம் அருகே குறித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது விமானி உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 3 சிறுவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவைளை, குறித்த விமான விபத்தில் பலியாகிய விமானி அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இயந்திரக்கோளாரே குறித்த விபத்திற்கான காரணமென முதல்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.