உன்னத பௌத்த போதனையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன் - ஜனாதிபதி

Published By: Vishnu

18 Mar, 2019 | 07:37 AM
image

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவுக்கு முன்னர் “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை பிரகடனப்படுத்தியதன் நோக்கம் நாட்டினுள் பௌத்த புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு திரிபீடகம் தொடர்பிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்குமேயாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

உன்னத பௌத்த போதனையை பல்வேறு விதமாக விபரிப்பதற்கு சில பிரிவினர் முயற்சித்து கொண்டிருப்பதாகவும் அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது தனக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, தான் ஜனாதிபதி என்ற வகையிலும் பௌத்தன் என்ற வகையிலும் பெளத்த போதனையின் பாதுகாப்பையும் அதன் எதிர்கால பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு தனது கடமையை சரிவர ஆற்றுவதாகவும் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் குளியாப்பிட்டிய, நெவகட, உடுபத்தாவ செல்கிரி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்லினாலான புத்த பகவானின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

உடுபத்தாவ பிரதேச செயலக பிரிவில் நெவகட கிராமத்தில் அமைந்துள்ள நெவகட மகாவெவக்கு அருகாமையில் அமைந்துள்ள செல்கிரி விகாரையானது வரலாற்று சிறப்புமிக்க புண்ணியஸ்தலமாகும்.

கருங்கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்த பகவானின் திருவுருவச் சிலை 56 அடி உயரம் கொண்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புத்த பகவானின் திருவுருவச்சிலையை திறந்து வைத்த ஜனாதிபதி, அதற்கு மலரஞ்சலியும் செலுத்தினார். சங்கைக்குரிய ஆலங்குளமே பிறேமசிறி தேரர் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசொன்றை வழங்கி வைத்ததுடன், புதிய சிலையின் மாதிரி சிலையொன்றையும் வழங்கினார்.

புதிய சிலையினை நிர்மாணித்த சிற்பியான தேபந்து சீ.டபிள்யு.விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதி, நினைவுப் பரிசொன்றை வழங்கி வைத்தார்.

ராமஞ்ஞ மகாநிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய நாபாண பேமசிறி தேரர், சங்கைக்குரிய ஆலங்குளமே பிரேமசிறி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08