மணல் கடத்தலை முறியடிக்க சென்ற கடற்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் முறுகல்!

Published By: Vishnu

17 Mar, 2019 | 01:04 PM
image

அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற சிறப்பு அதிரப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் இடம்பெறுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உள்பட 5 பேரைக் கைதுசெய்துள்ளனர்.

“அரியாலை கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக   மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து அதனை முறிக்க சிறப்பு அதிரடிப்படையினர் நேற்றிரவு அங்கு சென்றிருந்தனர்.

அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் அங்கு விரைந்தனர். விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சிறப்பு அதிரடிப் படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்குதல் உடன் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான இரண்டு சவல்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் உழவு இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17