ஆறுதல் வெற்றியா? அல்லது வைட் வோஷா?

Published By: Vishnu

16 Mar, 2019 | 08:18 PM
image

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் தொடரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை குவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று தொடரை 4:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் தொடரின் இறுதிப் போட்டி கேப் டவுனில் இன்று ஆரம்பானது.

ஏற்கனவே ஐந்து போட்டிகளையும் இழந்துள்ளதனால் இலங்கை அணி இப் போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதல் அளிக்குமா என்பது இலங்கை ரசிகர்கள் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பாகவுள்ளது.

மறுமுணைில் தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரை இலங்கை அணியை வைட்வோஷ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இன்றும் களமிறங்கியுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட தீர்மானித்து 49.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 9 ஓட்டத்தையும், உபுல் தரங்க 2 ஓட்டத்தையும், ஓசத பெர்னாண்டோ 22 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 56 ஓட்டத்தையும், அஞ்சலோ பெரேரா 31 ஓட்டத்தையும், திஸர பெரேரா 2 ஓட்டத்தையும், தனஞ்சய டிசில்வா 12 ஓட்டத்தையும், இசுரு உதான 32 ஓட்டத்தையும் பிரியமல் பெரேரா 33 ஓட்டத்தையும் அகில தனஞ்சய ஒரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் மலிங்க எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தார்.

இதனால் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு 226 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டுக்களையும் இம்ரான் தாகீர், அன்ரிச் நொர்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும்,  லுங்கி நிகிடி, பெலக்கொய்யோ  ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35