அமெரிக்காவில் மாபியா கும்பலின் தலைவன் கொடூர கொலை

Published By: Daya

15 Mar, 2019 | 12:36 PM
image

அமெரிக்காவின் மிகப்பெரிய மாபியா கும்பலின் தலைவன் பிரான்ஸிஸ்கோ கேலி, அவனது வீட்டின் வாசலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான்.

அமெரிக்காவின் 20ஆம் நூற்றாண்டின் மாபெரும் மாபியா குடும்பங்களில் ஒன்றான காம்பினோ மாபியா குடும்பத்தைச் சேர்ந்தவன் 53 வயதான பிரான்ஸிகோ கேலி. இவன் கடந்த புதன் அன்று மாலை, ஸ்டேடன் தீவில் காலனித்துவ பாணியில் கட்டப்பட்ட அவனது  சிவப்பு செங்கல் வீட்டின் வாசலில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளான்.  அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

 இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்து, கேலியை உடனடியாக வைத்தியசாலைககு கொண்டு சென்றனர்.  அப்போது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். கேலியின் உடம்பில் மர்ம நபர்கள் 6 முறை துப்பாக்கியால் சுட்டிருப்பதும், பின்னர் நீல நிற டிரக் ஒன்றினைக் கொண்டு கேலி மீது மோதியதும் விசாரணையில் தெரியவந்தது.

கேலி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் இத்தாலியில் காம்பியானா மாபியா கும்பலை வழி நடத்தி வந்துள்ளான். இவனை வெளிப்படையான மனிதன் என அழைப்பதும் உண்டு. அவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நியூயோர்க்கின் முக்கியமான 5 மாபியா குடும்பங்களில் காம்பினோ குடும்பமும் ஒன்று. ஜெனோவெசஸ், லச்சஸஸ், கொலம்பஸ், போனானோஸ் ஆகியவை மற்ற மாபியா குடும்பங்கள் ஆகும். கடந்த 34 வருடங்களில் ஒரு மாபியா தலைவன் கொடூரமாக கொல்லப்பட்டது இதுவே முதன்முறையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08