புத்தளம் பொலிஸ் வலயத்திற்குட்பட்ட புத்தளம் மற்றும் பள்ளம பொலிஸ் பரிவுகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்களின் போது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நால்வரைக் கைது செய்துள்ளதாக புத்தளம் வலயத்தின் மோசடி ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இந்நடவடிக்கையின் போது பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்பொத்த பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர்  நான்கு கோடா பெரல்களும், பெருமளவான கோடாக்கள் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவரும், வீரபுர பிரதேசத்தில் சட்டவிரோதமாக  21 கசிப்பு போத்தல்களை தனது வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்காக அந்தந்த பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பள்ளம மற்றும் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.