இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: R. Kalaichelvan

15 Mar, 2019 | 11:33 AM
image

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளான நிலையில்  இராமேஸ்வரத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் காங்கேசன்துறை பொலிஸ் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை அடுத்து எட்டு மீனவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் அ. ஜூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , எட்டு மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆம் வகுப்பு படிக்கும் ஷாம் டேனியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் துரைபாண்டி இருவரது கல்வியையும் கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற  வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை குறித்த படகு விபத்தில் இராமேஸ்வரத்தை சேர்ந்த முனுசாமி எனும் மீனவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39