வவுனியா ஓமந்தையில் வாள்வெட்டு : இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

Published By: Vishnu

15 Mar, 2019 | 08:26 AM
image

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை சேமமடு பகுதியில் வயல் காவலிற்காக இருந்த இருவர் மீது அவ்விடத்திற்கு  வந்த இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இருவரையும் பொலிஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர்.

கால் மற்றும் கைகளில் வாள் வெட்டு காயங்களுடன் வசந்தகுமார் (வயது - 37) , கன்னம் மற்றும் கழுத்து பகுதியில் வாள்வெட்டு காயங்களுடன் கருணாகரன் (வயது - 33)  என்பவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீர் விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55