கிளிநொச்சியில் றோல் போல் விளையாட்டுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை

Published By: Digital Desk 4

15 Mar, 2019 | 01:12 AM
image

கிளிநொச்சி மாவட்டம் கடந்த சில வருடங்களாக றோல் போல் விளையாட்டில் சாதித்து வருகிறது. கடந்த 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து உலக கிண்ண  றோல் போல் போட்டிக்கும், ஆசிய கிண்ண றோல் போட்டிக்கும் யுவதிகள் சென்று  சாதித்தும் வந்துள்ளனர்.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் றோல் போல் விளையாடுவதற்கும்ஈ பயிற்சி பெறுவதற்குமாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு உலக கிண்ண றோல் போட்டி பங்களாதேஸில் இடம்பெற்ற போது இலங்கை தேசிய றோல் போல் அணியில் இடம்பிடித்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவிகள் மற்றும்  கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெல்கமில் இடம்பெற்ற ஆசிய றோல் போட்டியில்  இலங்கை தேசிய அணியில் விளையாடிய கிளிநொச்சி யுவதிகள் நெல் உலரவிடும் தளத்திலும், பொது  நோக்கு மண்டபத்திற்கும்  தங்களுக்கான பயிற்சியினை பெற்றே போட்டியில் பங்குபற்றி சாதித்துள்ளனர்.

எனவே கிளிநொச்சி மாவட்டம் தற்போது றோல்போட்டியில் பிரகாசித்து வரும் நிலையில்  மாவட்டத்தில் றோல்போட்டிக்கான எவ்வித வசதிகளும் இதுவரை இல்லை. றோல் போட்டிக்கான மைதானம் இல்லை, பயிற்றுவிப்பாளர் இல்லை, வீர வீராங்கனைகளுக்கான உபகரணங்களை பெற்றுக்கொள்வதில் சிரமம் என பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. 

எனவே றோல் போட்டியில்  தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச போட்டியில்  பங்குபற்றும் அளவில் திறமைகளை  கொண்டுள்ள இளைஞர் யுவதிகள் உள்ள மாவட்த்தில் இவ்விளையாட்டுக்குரிய அடிப்படை வசதிகளையும், பயிற்றுவிப்பாளரையும் அரசு நியமிக்க வேண்டும் என மாவட்டத்தின் விளையாட்டு சமூகம் கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35