‘Festival for Our Planet’ நிகழ்வுடன் அறிமுகமாகவுள்ள NGage Goodvocacy 

Published By: R. Kalaichelvan

14 Mar, 2019 | 05:02 PM
image

இலங்கையின் முன்னணி சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பாடல் நிறுவனமான Bates Strategic Alliance தற்போது NGage Strategic Alliance நிறுவனமாக தமது சன்நாமத்தை மீளமைத்துள்ளது. இதனை ஒரு பொது வெளியீட்டாக அனைவருக்கும் அறியத்தரும் டிவிதமாக சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்வானது Race Course இற்கு அருகில் உள்ள Good Market இல் நாளை (சனிக்கிழமை 16.03.2019) மு.ப 10.00 மணிமுதல் பி.ப 6.00 வரை அறிவூட்டலுடன் கூடிய களியாட்ட நிகழ்வாக இடம்பெறவுள்ளது. உலகலாவிய ரீதியில் சிறார்களினால்காலநிலை வேலைநிறுத்தம் எனும் தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படும் Climate Strike எனும் முந்தைய தின நிகழ்வுடன் இணைந்து சுய செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வாக இது அரங்கேரவுள்ளது. ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் இக்காலநிலை மாற்றமானது

திகைப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. இப்பிரச்சனைக்கு சரியானதொரு தீர்வை முன்னிறுத்துமாறு வலியுறுத்தி 270ற்கும் அதிக நாடுகளில் உள்ள மாணவர்கள் உலகலாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 

அதனை வரவேற்கும் வகையில் அதற்கடுத்தநாள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது ‘Festival of our planet’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ளது.

 இதில் சூழலியல் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்ற சவால்கள் என்பன தொடர்பில் கவனஞ் செலுத்துவதன் ஊடாக உயரிய எசமூகத்தை உருவாக்குதல் மற்றும் நிலையான மதிப்பீட்டை பெறல் போன்றவறறை நோக்கமாக கொண்டு இடம்பெறவுள்ளது.

இதில் சூழலியல் தொடர்பான முன்னணி செயற்பாட்டாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் கலந்துச் சிறப்பிக்கவுள்ளதுடன் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம், சமுத்திரங்கள், வசிப்பிடங்கள், நீர் மற்றும் காற்று ஆகியவற்றை மாசுபடுத்துவதன் மூலம் ஏற்படும் சுற்றுச் சூழல் சீரழிவை தடுக்க, நமது வனப்பகுதிகள், மழைக்காடுகளின் பல்லுயிரினங்களையும், நமது பாரம்பரிய யானைகளையும், திமிங்கலங்களையும் பாதுகாத்தல், படிம எரிபொருட்களை புதுப்பித்தலுக்கான தீர்வுகளை பரிந்துரைத்தல், உற்பத்தி, நுகர்வு மற்றும் நகரங்களின்வளர்ச்சி, சுற்றுச் சூழல்-ஸ்மார்ட் நடைமுறைகள், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான மேலாண்மை போன்றன தொடர்பில் தம் அனுபவத்தினையும் அறிவினையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

தமது புதிய சன்னாமம் மற்றும் இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த NGage Strategic Alliance நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான நிமல் குணவர்தன “எம் பூமி முகங்கொடுத்துள்ள தீவிர பேண்தகைமை சவால்கள் தொடர்பில் நாம் கவனஞ்  செலுத்த வேண்டியது அவசியம். சந்தைப்படுத்துனர்களாக நாம் சந்தைப்படுத்தும் தயாரிப்புக்களானது

ஒழுங்குநெறிக்குட்பட்டதாகவும் பொறுப்புடைமையுடன் கூடியதாக அமையவேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டு கடந்த நூற்றாண்டுகளிலேயே நாம் எமது தயாரிப்புக்களை நுகர்வோர் கலாச்சாரத்திலிருந்து நூதனத்திற்கு மாற்றிவிட்டோம். தகவல் தொடர்பாளர்களாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பில் அக்கறை செலுத்தும் செயற்றிட்டங்களை மேற்கொள்வது இலங்கை குடிமகனாகிய எம் ஒவ்வொருவரினதும் நிறுவனரீதியிலான மற்றும் தனிப்பட்ட கடமையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08