உலக திறமையாளன் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்ட தமிழ் சிறுவன்...!

Published By: J.G.Stephan

14 Mar, 2019 | 04:19 PM
image

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற டேலன்ட் ஷோ ``வேர்ல்டு பெஸ்ட். இதில், ``இந்தியாவின் சார்பாக தமிழகச் சிறுவன் லிடியன் கலந்து கொண்டார். முதல் சுற்றில், லிடியன் அதிக வேகமாக பியானோ வாசித்ததினை உலகளவில் பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தனர்.

பல கட்ட சுற்றுகளுக்குப் பின், நடந்த இறுதிப்போட்டியில் ``வேர்ல்டு பெஸ்ட்" என்ற டைட்டிலைப் பெற்று, லிடியன் சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து லிடியனிடம் பேசிய போது>

``ரொம்ப ஹேப்பியா இருக்கு, தமிழ்நாடு மீது உலகப் பார்வை விழுக ஆரம்பித்திருக்கிறது என்றும் சாதனைகள் தொடரும்" என்றும் கூறியிருந்தார்.



லிடியனின் அப்பா, சதீஸ் இசையமைப்பாளர். அதனால், சிறுவயது முதலே இசை மீது லிடியனுக்கு ஆர்வம் வந்துவிட்டது. அந்த ஆர்வத்தை நன்கு புரிந்துகொண்ட பெற்றோர் படிப்பைக் கூட இரண்டாம் இடமாக்கி, இசை பக்கம் லிடியனைத் திருப்பி விட்டனர். 

சின்ன வயதில் இத்தனை அற்புதமான திறமையா? என்று பல தரப்பிலிருந்து, அப்போதே பாராட்டுகள் குவிந்திருந்தன. இன்று உலக அளவில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் தமிழகச் சிறுவன் லிடியனின் வெற்றிப் பயணம் தொடர வீரகேசரி இணையதளம் சார்பான வாழ்த்துகள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right