பேஸ்புக் காதலில் மலர்ந்த மனிதநேயம்

Published By: Daya

14 Mar, 2019 | 03:17 PM
image

கேரளாவில் விபத்தில் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த வாலிபரை கல்லூரி மாணவி திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா சீதாதேடு பகுதியை சேர்ந்தவர் புஷ்பகரன் , மகள் நீது  கல்லூரி மாணவி. இவருக்கும் கோழிக்கோடு நாதாபுரம் நரிப்பாறையை சேர்ந்த நானு என்பவரது மகன் ஸ்ரீகாந்த் (24) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.

பரஸ்பரமாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஸ்ரீகாந்த் ஒரு விபத்தில் சிக்கியதில் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகளை இழந்தார். அதன்படி இடுப்புக்கு கீழ் செயல் இழந்து அவதியடைந்தார்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நீது திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து பத்தினம்திட்டா பொலிஸாருக்கு புகார் செய்தனர். 

பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மாணவி நீதுவை தேடினர். சைபர் கிரைம் பொலிஸார் உதவியுடன் தேடியபோது நீதுவின் கையடக்கதொலைப்பேசியின் உதவியுடன்  நாதாபுரம் நரிப்பாறையில் இருப்பது தெரியவந்தள்ளது. 

இது குறித்து தகவல் கிடைத்ததும் நாதாபுரம் டி.எஸ்.பி. ஆபிரகாம் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியை மீட்டு நீதிமன்றில் ஒப்படைத்தனர்.

நீதிமன்றம் விசாரித்தபோது தனக்கு 18 வயது முடிந்து விட்டது. பேஸ்புக் காதலர் ஸ்ரீகாந்த் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகள் இல்லாமல் செயல் இழந்துபோனாலும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணத்துக்கு தடை ஏதும் இல்லை என்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து நேற்று பெற்றோர்கள் சம்மதத்துடன் நீதுவுக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் திருமணம் நடந்தமை குறிப்பிடத்தக்கது. 

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47