மியன்மாரின் வடமேற்கு பகுதி நகரான மண்டலேயில் நேற்றிரவு 6.9 ரிக்டர் அளவிலான பூமியதிர்ச்சி  உணரப்பட்டுள்ளது.

குறித்த பூமியதிர்ச்சி தாக்கத்தினால் டாக்கா, கொல்கத்தா, அசாம் பிராந்தியம், மற்றும் மியன்மாரின் யங்கன் ஆகிய பகுதிகளில்  கட்டிடங்களில் வசித்த மக்கள் அச்சத்தினால் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ராச்சிய அரச குடும்பத்தின் இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோர் இந்தியாவின் வடகிழக்கு பகுதியான அசாமின் தேசிய பூங்காவில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையும் உயிரிழப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றி  எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.