பேஸ்புக் மூலமாக யுவதி ஒருவருடன் காதலில் வசப்பட்ட இளைஞன், குறித்த யுவதி வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள ஆயத்தமான செய்தியை கேட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகச்சிய – சசதயாய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. குறித்த இளைஞனின் சடலத்தை மாரவில பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மாரவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.