சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா!

Published By: Vishnu

13 Mar, 2019 | 10:14 PM
image

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

பின்ச் தல‍ைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் அவுஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்றன. 

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்க தொடரின் இறுதியும் ஐந்தாவதுமான போட்டி இன்று  டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் ஆரம்பமாகியது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடுத்தாடுவதற்கு தீர்மானித்தது, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9  விக்கெட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது.

273 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 237 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 35 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 56 ஓட்டத்தையும், தவான் 12 ஓட்டத்தையும், விராட் கோலி 20 ஓட்டத்தையும், ரிஷாத் பந்த் மற்றும் விஜய் சங்கர் தலா 16 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 46 ஓட்டத்தையும், கேதர் யாதவ் 44 ஓட்டத்தையும், மொஹமட் ஷமி 3 ஓட்டத்தையும், குல்தீப் யாதவ் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் பும்ரா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் சம்பா 3 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ், ரிச்சட்ர்சன் மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் நெதன் லியோன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், சொந்த மண்ணில் இந்திய அணியையும் தலைகுனிய வைத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35