தொடரை வெல்லுமா இந்தியா?

Published By: Vishnu

13 Mar, 2019 | 05:15 PM
image

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றியிலக்காக 273 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் அவுஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. 

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்க தொடரின் இறுதியும் ஐந்தாவதுமான போட்டி இன்று  டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் ஆரம்பமாகியது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதற்கமைவாக பின்ச் மற்றும் உஷ்மன் கவாஜா இணைந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுக்க அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி முதல் 10 ஓவர்களில் 52 ஓட்டங்களை பெற்றது.

பின்ச் 18 ஓட்டத்துடனும் கவாஜா 34 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர, 14 ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் பின்ச் 27 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அதனால் அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட் 74 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.

2 ஆவது விக்கெட்டுக்காக கவாஜாவுடன் ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி சேர்ந்தாட ஆஸி. அணி 19 ஆவது ஓவரின் முதலாவது பந்தில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 100 ஓட்டங்களையும், 26 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் 150 ஓட்டங்களையும் பெற்றது.

இதையடுத்து 31 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் உஷ்மன் கவாஜா சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் இத் தொடரில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

எனினும் கவாஜா 32 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் புவனேஷ்வர் குமாரின் பந்து வீச்சில் விராட் கோலியிடம் பிடிகொடுத்து 100 ஓட்டத்துடனே ஆட்டமிழக்க அடுத்து வந்த மெக்ஸ்வெலும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 

மெக்ஸ்வெலையடுத்து ஹேண்ட்ஸ்கேம்ப் 52 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸி அணி 36.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றது.

ஆடுகளத்தில் 5 ஆவது விக்கெட்டுகாக டர்னரும், ஸ்டோனிஸ் தொடர்ந்தும் ஜோடி சேர்ந்தாட ஆஸி அணி 39.2 ஓவரில் 200 ஒட்டங்களை பெற தனது அதிரடியை அரங்கத்தில் டர்னர் காட்ட ஆரம்பித்தர்.இருந்தபோதும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத அவர் 41.2 ஆவது பந்தில் 20 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ஆஸி அணி 41.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை குவித்தது.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9  விக்கெட்டுக்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுக்களையும், மெஹம் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், குல்தீப் பாதவ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21