உலகில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுத்து கொடுக்க உதவிய பனாமாவில் உள்ள மோசெக் பொன்சேகா சட்ட நிறுவனத்தை அந் நாட்டு பொலிஸார் நேற்று முற்றுகையிட்டுள்ளனர்.

உலகலாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பனாமா பணமோசடி சம்பவத்தை அந் நாட்டு பத்திரிகை ஒன்று அண்மையில் வெளிப்படுத்தியதை தொடர்ந்து  பல நாடுகள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உலகில் முக்கிய  செல்வந்தர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் நடிகர் நடிகைகள் என பல பேர் தமது கணக்கில் வரதா சொத்துகளை பனாமாவில் மறைத்து வைத்திருந்தமை அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.