மன்னாரிலும் அதிபர், ஆசிரியர்கள்   சுகயீன விடுமுறை போராட்டம்-(படங்கள் இணைப்பு)

Published By: R. Kalaichelvan

13 Mar, 2019 | 12:07 PM
image

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை முழுவதும் ஆசிரியர்கள் கருப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று காலை  சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று காலை 8 மணி முதல் 8.30 மணிவரை தமது பாடசாலைகளுக்கு முன்பாக கருப்பு பட்டி அணிந்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும், 2019 ஆம் ஆண்டு அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தல் வேண்டும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழுத்தங்கள்  உடனடியாக நிறுத்த வேண்டும்,ஆசிரியர்களின் மான்பினை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போரட்டத்தின் பின் பாடசாலையின் செயற்பாடுகள் வழமை போல் இடம் பெற்றமைகுறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17