(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - வெலிங்டன் தோட்ட பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தோட்டம் ஒன்றில் வேலை செய்துக்கொண்டிருந்த வேளை குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் நேற்று கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிங்டன் தோட்டத்தை சேர்ந்த 55 வயதுடைய பத்மநாதன் என்பவரே இவ்வாறு குளவிக் கொட்டுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் தனது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.