கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

26 Nov, 2015 | 05:54 PM
image

(வாஸ் கூஞ்ஞ)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்திய இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு இந்திய மீனவர்களை நேற்று புதன் கிழமை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினர் ஊடாக மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக இன்று வியாழக் கிழமை ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த இந்திய மீனவர்களை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று பிற்பகல் மன்னார் நீதிமன்றில் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னலையில் ஆஐர்படுத்தினர்.

 இதையடுத்து  குறித்த 6 இந்திய மீனவர்களை எதிர்வரும்  டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் பெயர் விபரம் பின்வருமாறு,
 
கஜேந்திரன் வினோத் (26), பூமிநாதன் குணசேகரன் (54),ஜெயராமன் சுரேந்திரன் (27), முருகானந்தன் ஐயன் (25), உதயகுமார் சப்ரி (28), அந்தோனிராஐ் மெசியா (24) ஆகியோரே கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் தெற்கு கரையூரைச் சேர்ந்த மீனவர்களாவார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15