சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் : ஜனாதிபதி வாழ்த்து

Published By: MD.Lucias

13 Apr, 2016 | 12:07 AM
image

நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக அமைய மனமார பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாந்தியும் சமாதானமும் நிறைந்த சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கை வாழ் தமிழ் இந்துக்களினதும் சிங்கள பௌத்தர்களினதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. இவ்விரு இனத்தவர்களும் தத்தமது கலாசார தனித்துவங்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கி இப்பண்டிகையினை  கொண்டாடுவதே வழமையாகும். இது இலங்கையின் மேற்குறிப்பிட்ட இரு இனங்களுடன் இணைந்து ஏனைய இனத்தவர்களும் கூட ஒருவகையில் கொண்டாடும் தேசிய பண்டிகையாகவும் அமைந்துள்ளது.

நம் நாட்டின் முக்கிய கலாசார பண்டிகையாகிய சித்திரைப் புத்தாண்டு தனி மனித வாழ்க்கையையும் மனித சமூகத்தையும் புதுப்பித்து புத்துயிரூட்டி மனநிறைவையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொடுப்பதோடு புதிய சிந்தனைகளுடன் புதிய வாழ்க்கைக்கும் வழிவகுத்து வருகின்றது.

இப்புத்தாண்டின் போது ஒட்டுமொத்த சமூகமும் குறிப்பிட்ட ஒரு சுப நேரத்தில் உணவு சமைத்து உண்பது என்ற விடயம் ஏனைய எந்தவொரு குறிப்பிட்ட இனத்தவர்களிடமும் காணமுடியாத ஒரு அற்புதமான அம்சமாகும். அத்தோடு புத்தாண்டானது அர்ப்பணிப்பு, பாராட்டுதல், பகைமை மறத்தல், பெரியோரைக் கனம் பண்ணுதல், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாகும். சித்திரைப் புத்தாண்டில் இந்நற்குணங்களைப் புரிந்து அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கலாசார உரிமைகளை பேணிப் பாதுகாத்தவாறு மனமகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ ராசிக்கு பயணிப்பதை குறித்து நிற்கின்ற அற்புதமான ஒரு பண்டிகையாகவும் சித்திரை வருடப்பிறப்பை குறிப்பிடலாம். புத்தாண்டுடன் புதுப்பொலிவுபெறும் இயற்கையுடன் எமது தொடர்புகளையும் புதுப்பிக்கும் ஓர் அபூர்வ சந்தர்ப்பமாகவும் இப்புத்தாண்டு அமைகின்றது. விருந்தோம்பல் மூலம் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற மங்களகரமான இந்நிகழ்வை தேசிய நல்லிணக்கத்திற்கு வலுவூட்டுகின்ற ஒரு முக்கிய பண்டிகையாகவும் கொள்ளலாம்.

இவ்வேளையில் அனைத்து இல்லங்களிலும் மங்கள ஒளி பிராகாசித்து அனைவரின் முகங்களும் மகிழ்ச்சியில் மலர்ந்து பகைமை உணர்வு தணிந்து தம் அயலவர்களை கருணை உள்ளத்துடனும் கனிவு மனதுடனும் பார்க்கப்பழகும் நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக இச்சித்திரைப் புத்தாண்டு அமைய வேண்டுமென மனமார பிரார்த்திப்பதோடு சாந்தியும் சமாதானமும் நிறைந்த சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இப்புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதி கொள்ளுவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24