இலங்கை விமான படையின் 68 ஆவது வருடநிறைவு : சிவனடிபாதமலையில் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு 

Published By: R. Kalaichelvan

12 Mar, 2019 | 10:38 AM
image

இலங்கையின் விமான படையின் 68 வது வருடநிறைவை முன்னிட்டுசுற்று சூழல் தூய்மையை பேணும் வகையில் சிவனடிபாதமலையில் காணப்படும் கழிவுகளை அகற்றும் பணியானது இன்று இடம்பெற உள்ளது.

சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான சப்ரகமூவ மாகாண சங்க நாயக்க அவர்களும் ல்மடுல்ல ராஜமகா விகாரையின்காராதிபதியும்  ஊவா வெல்லச பல்கலைகழக வேந்தருமான பெங்கமூவ தம்பதின்ன தேரர் அவர்களின் ண்டுகோளிற்கிணங்க இவ்வாறான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதாகவும் விமான படையின் உயர் அதிகாரியான எயா மாசல் கபில ஜெயம்பதி அவர்களின் பணிப்புரையில் இலங்கை விமான படையின் உயர் அதிகாரியான எயா கொமாண்டர் வர்சன குணவர்த்தன அவர்களின் மேற்பார்வையில் விமானபடையை சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் இன்று முதல் ஹட்டன் வழிபாதையில் இருந்து இரத்தினபுரி வழிபாதைவரை சுற்றி சூழல்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் பூஜைகளை நடாத்தி அதன் பின்னர் நல்லதண்ணி சிவனொளிபாதமலையின் அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை காணப்படும் கழிவுகள் அனைத்தையும் அகற்றுவதுடன் யாத்திரிகள் இளைப்பாறி செல்லும் சாலைகளுக்கும் வர்ணம் தீட்டும் வேலைகளிலும் ஈடுபட உள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் இதில் ஒரு பகுதியினர் இரத்னபுரி பலாபத்தல வீதியினூடாக சிவனொளிபாதமலையின் உச்சிவரை இவ்வாறான வேலைத்திட்டத்தினை இன்று காலை ஆரம்பித்துள்ளனர் இதனால் சிவனடிபாத மலையில் காணப்படும் சகல கழிவுகளும் அகற்றபடும் என இலங்கை விமான படையின் உயர் அதிகாரி எயா கொமாண்டர் வர்சன குணவர்த்தன அவர்கள் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09