பிரதேச அபிவிருத்தி வங்கியின் மஹவெவ கிளை முகாமையாளரை தாக்கிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வங்கியில் கடன் பெற்ற ஒருவர் கடனுக்கான தவணை கட்டணத்தை செலுத்தாமையினால் அது தொடர்பில் விசாரணை செய்ய கடந்த 24 ஆம் திகதி வங்கி முகாமையாளர் மாதம்பே பகுதியில் உள்ள குறித்த நபரை தேடி சென்ற போதே இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.