பிரபல பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வீதி விபத்தில் பலி

Published By: Priyatharshan

12 Apr, 2016 | 02:12 PM
image

இந்தியாவின் முன்னணி பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஜெய்பூரைச் சேர்ந்த வேணு பலிவால் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 44 வயதான வேணு பாலிவால் மத்திய பிரசேத மாநிலம் விதிஸா மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூர் அருகே தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அவர் வீதியில்  வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக விதிஸா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

வேணு பலிவாலின் மரணம் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளிடையேயும் ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35