பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் நோக்கம் கொண்டுள்ளோம்,யுத்தம் எமது நோக்கல்ல :பாகிஸ்தான் பிரதமர்

Published By: R. Kalaichelvan

09 Mar, 2019 | 01:27 PM
image

பாகிஸ்தான் இனி தனது நிலத்தில் தீவிரவாதத்தை அனுமதிக்காது எனவும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலேயே நோக்கம் கொண்டுள்ளோம் எனறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிதிதுள்ளார்.

இதுகுறித்து சிந்த்தில் இடம் பெற்ற பேரணி ஒன்றில்   கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பாகிஸ்தான் தனது நிலத்தை எந்தக் காரணத்துக்காகவும்  தீவிரவாதம் பயன்படுத்த அனுமதிக்காது. இது புதிய பாகிஸ்தான். இது புதிய காலம். இந்த பாகிஸ்தான் அமைதியானது, நிலைத்தன்மையுடையது. பொறுப்புணர்வுள்ள நாடு.  நாங்கள் எந்த தீவிரவாத இயக்கமும் இங்கு செயல்பட அனுமதிக்க மாட்டோம்.

நாங்கள் பிடிப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை அவர் நாட்டுக்குதிரும்ப அனுப்பினோம். ஏனென்றால் எங்களுக்கு போர் தேவையில்லை.  நாங்கள் இந்தச் செய்தியை இந்தியாவுக்கு மீண்டும் தெரிவிக்கிறோம். 

நாங்கள் புல்வாமா தாக்குதல் விசாரணையில் இந்தியாவுக்கு உதவ முடிவு செய்திருக்கிறோம். இது பயத்தினால் எடுத்த முடிவு என்று யாரும் நினைக்க வேண்டாம்.  ஏனென்றால் நாங்கள் காணவிருக்கும் பாகிஸ்தான் வறுமையை ஒழிக்கும். எங்களது கொள்கைகள் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தானில் முன்னர் அனுமதித்தது எந்தக் காரணமாக இருந்தாலும், இனி இந்த மண்ணில் தீவிரவாத இயங்களை அனுமதிக்கமாட்டோம் என்று அனைத்து கட்சிகளும் முடிவு செய்துள்ளோம்.

தர்பர்கர் மாவட்டத்தில் பாதி மக்கள் தொகை இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். இன்றைய இந்திய அரசு சிறுபான்மையினருக்கு செய்து கொண்டிருப்பதை பாகிஸ்தான் பிரதிப்பலிக்கவில்லை. நாங்கள் எங்களது  சிறுப்பான்மை மக்களை பாதுகாப்போம்” என குறித்த நிகழ்வில் அவர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களின்  செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33