பாணந்துறை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நேற்று மாலை வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

பாணந்துறை, வேகடை பிரதேசத்தைச் சேரந்த 59 வயதுடைய குறித்த நபர், அதிகளவிலான மாத்திரைகளை குடித்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், தற்போது பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.