சபையில் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் தயாசிறிக்குமிடையில் வாக்குவாதம்

Published By: Vishnu

08 Mar, 2019 | 05:47 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டு குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்படும் இலங்கை குறித்த விவகாரத்தில் இணை அனுசரணை விடயத்தில் சபை முதல்வர் கிரியெல்லவிற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி எம்.பிக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.  

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்கான நேரத்தில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி கேள்வியொன்றை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர,  இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் புதிய பிரேரணை எதனையும் உள்ளடக்க தயாராகின்றதா? கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர இணை அனுசரணையை ஏற்றுக்கொண்டதைப்போல இம்முறையும் அரசாங்கமாக ஏதேனும் பிரேரணையை ஏற்றுகொள்ள தீர்மானம் எடுத்துள்ளீர்களா? இது குறித்து அமைச்சரவையில் ஏதும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா, பாராளுமன்றத்தில் இதுகுறித்து ஏதும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதா? ஏற்கனவே அரசங்கம் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி இறுதியில் இலங்கைக்குள் சர்வதேச நீதிபதிகளை வரவழைத்து குற்ற விசாரணைகளை நடத்தும் நிலைமையே உருவாகியது. ஆகவே மீண்டும் அவ்வாறான  இணை அனுசரணை ஒன்றினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போகின்றதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த லக்ஷ்மன் கிரியெல்ல,  இராணுவத்தையோ அல்லது வேறு எவரையுமோ தண்டிப்பதற்கு சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை, அதேபோல் தற்போதைய பிரேரணையை திருத்தி இலங்கைக்கு சாதகமான வகையில் ஒரு பிரேரணையை கொண்டுவருவது குறித்து நாம் சர்வதேச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59