பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்  Huawei நிறுவனத்தின் பிரதித் தலைமையதிகாரி யாவ் வைமின் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அண்மையில்  இடம்பெற்றது.

சந்திப்பையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

Huawei நிறுவனமானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் முன்னிலை வகித்து வருவதை நாம் அறிந்துள்ளதுடன், இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் திறனைக் கட்டியெழுப்புவதில் Huawei உதவிவருவதையிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். 

எதிர்காலத்தில் இலங்கையில் இன்னும் அதிகரித்த அளவில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு Huawei இனை ஊக்குவிக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து Huawei நிறுவனத்தின் பிரதித் தலைமையதிகாரி யாவ் வைமின் கருத்துத் தெரிவிக்கையில்,

“தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப புத்தாக்கத்தில் தனது சர்வதேச அனுபவத்தையும், தனது முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளையும் இலங்கையில் அறிமுகப்படுத்துவதையிட்டு Huawei மிகவும் மகிழ்ச்சிஅடைந்துள்ளது.

உள்நாட்டில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத் திறன் கொண்ட பணியாளர்களை விருத்தி செய்ய உதவி, மொபைல் புரோட்பான்ட்  வீச்சு மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்கும் Huawei உதவும். 

இந்தவகையில் குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களும், உயர் தரம் கொண்ட தொடர்பாடல் சேவைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்கு நாம் உதவுவோம். 

“பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்தியில் இலங்கை அரசாங்கத்துடன் ஒருநீண்டகால மூலோபாய பங்காளர் மற்றும் பங்களிப்பாளராகமாறவேண்டும் என்பதில் Huawei மிகுந்தஅர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.

டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வழிகோலுகின்றது. இது தற்போது பல்வேறு தொழிற்துறைகளில் வளர்ச்சிக்கான மிகமுக்கியமான உந்துசக்தியாக உள்ளதுடன், நாட்டின் பிரதான போட்டித்திறனையும் பிரதிபலிக்கின்றது. 

சர்வதேச இணைப்புத்திறன் சுட்டெண்ணின் (GCI)பிரகாரம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மீதான முதலீடு,மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் மீதான முதலீட்டை 20 வீதத்தினால் அதிகரிக்கும் போதுஒருநாட்டின்  மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஒரு வீதத்தினால் அதிகரிக்கின்றது. 

இலங்கைதனதுதேசியபொருளாதாரத்தைஅபிவிருத்தி செய்வதில் தற்போதுமிகுந்தஅர்ப்பணிப்புடன் உள்ளது. இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையைமேம்படுத்துவதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு Huawei தயாராகஉள்ளது. 

விரைவான, நிலைபேற்றியல் கொண்ட பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப த்தைவழங்குவதற்கு, Huawei தனதுமிகச் சிறந்த சர்வதேச நடைமுறைகள் மற்றும் புத்தாக்கம் கொண்டதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சார் தொழில்நுட்பங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளும். 

இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் வல்லுனர்களை விருத்திசெய்ய உதவுவதற்கு, Huawei இன் அனுமதிஅங்கீகாரம் பெற்ற வலையமைப்பு அக்கடமியை நிறுவுவதற்கு Huawei உள்நாட்டு பல்கலைக்கழகங்களுடன் பங்காளராக இணைந்து செயற்படும். மேலும் எதிர்கால நிகழ்ச்சி நிரலுக்கான விதைகளையும் Huawei வித்திட்டு, அறிமுகப்படுத்தும். 

இந்த ஆண்டில் சீனாவிற்கு இரு வாரகாலகல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொள்வதற்கு 10 பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனுசரணையளிப்பதற்கு Huawei திட்டமிட்டுள்ளது. 

இந்தமாணவர்கள் Shenzhen இலுள்ள Huawei இன் தலைமை அலுவலகத்தில் நவீனதகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்களைகற்கும் வாய்ப்பைப் பெற்று, சர்வதேச வியாபார தொழிற்பாடுகளின் அனுபவம் மற்றும் பல்வேறுபட்டகலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டபணிச் சூழலில் சீனகலாச்சாரம் ஆகியவற்றையும் நேரடியாக கண்டும்,கேட்டும் அறிந்துகொள்ளமுடியும். 

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தொழிற்துறைப் போக்குகள் தொடர்பான நேரடி தகவல்களையும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குகொள்பவர்கள் பெற்றுக்கொள்ளமுடியும். 

2005 ஆம் ஆண்டுமுதல் Huawei இலங்கையில் வியாபாரத் தொழிற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. தொலைதொடர்பாடல் உபகரணங்களை வழங்குவதில் முன்னிலைவகிக்கும் ஒருநிறுவனம் என்றவகையில் உள்நாட்டிலுள்ள 20 மில்லியன் மக்களுக்கு சேவையளிப்பதற்கு உள்நாட்டிலுள்ள தொழிற்பாட்டாளர்களுடன் பங்குடமைகளை Huawei கைட்டியெழுப்பியுள்ளது. 

P8 மற்றும் Mate8 உட்பட தனது பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்களையும் Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Huawei இலங்கையில் 300 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன், இவர்களில் 80% ஆனோர் உள்நாட்டவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.