இரத்மலானையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியை நடத்திச் சென்ற முகாமையாளரையும் நான்கு பெண்களையும், நேற்று கல்கிஸை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் 31, 18, 23, 31 மற்றும் 36  வயதானவர்கள் எனவும் இவர்கள் கொடகம்பல, இரத்மலானை, பண்டாரவளை மற்றும் ஊரகஸ்மங்கந்திய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.