பொலிஸார் சுட்டுக்கொலை:ஒருவர் விடுதலை,120 பேரிடம் விசாரணை 

Published By: R. Kalaichelvan

08 Mar, 2019 | 10:47 AM
image

வவுணதீவில் இரு பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு  விளக்கமறியல் நீடிக்கபட்டதுடன் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 120 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறன.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பொலிசார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்து 90 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு மேலும் ஒரு மாதம்தடுப்பு காவல் நீடிப்பு ,ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 120 பேரிடம் விசாரணை இடம்பெற்றுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணைகள்; இடம்பெற்று வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வருடம் வியாழக்கிழமை நவம்பர் (19) நள்ளிரவு கடமையில் இருந்த பொலிசார் இருவரை இனந் தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைது துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளனர் 

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட சி.ஜ.டி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசிங்கா தலைமையிலான சி.ஜ.டி. யினர் விசாரணையினை மேற்கொண்டுவரும் நிலையில் கரையக்கந்தீவைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காம தம்பிராசா குமரன் எனப்படும்  முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான அஜந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய புலிகளின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன கைது செய்யப்பட்ட இருவரையும் 90 நாள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ருந்த கரையக்கந்தீவைச் சேர்ந்த கண்ணன் என அழைக்கப்படும் கதிர்காம தம்பிராசா குமரன் எனப்படும்  முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான அஜந்தன் என்பவருடைய 90 நாள் தடுப்பு காவல் 8 ம் முடிவரடையும் நிலையில் அவரை மீண்டும் ஒரு மாதகாலம் தடுப்புகாவலில் வைத்து விசாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனமதியளித்ததையடுத்து அவரின் தடுப்பு காவல் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை கைது செய்து 90 நாள் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன் கடந்த ஜனவரி மாதம் 11 ம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார் .

இவ் விவகாரம் தொடர்பாக இதுவரை முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் ஒருவர் உட்பட முன்னாள் போராளிகள் பெண்கள் என 120 க்கு  மேற்பட்டோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன்.  பல கோணங்களில் சி.ஜ.டி.யினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் பொலிசார் தீவிர விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர் என அவர் தெரிவித்தார். 

இதேவேளை இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரியும் என சி.ஜ.டி. யினரிடம் தெரிவித்ததுவிட்டு பின்னர் தெரியாது என இந்த விசாரணையை திசை திருப்ப முயன்ற வவுணதீவு கரையக்கந்தீவைச் சேர்ந்த31 வயதுடைய ஜோச் நிரஞ்சன் என்பவர் கடந்த  90 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில்வைப்பு வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36