ஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் குறித்து அமெரிக்கா இலங்கை அரசுடன் பொருத்தமான முறையில் பேசும் -  அலெய்னா பி ரெப்லிட்ஸ்

Published By: Priyatharshan

08 Mar, 2019 | 05:50 AM
image

(எம்.நியூட்டன்)

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் குறித்து அமெரிக்கா இலங்கை அரசுடன் பொருத்தமான முறையில் பேசும் என இலங்கைக்கான அமெரிக்க துாதுவா்  அலெய்னா பி ரெப்லிட்ஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சமகால நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக யாழ். குடாநாட்டுக்கு வருகைதந்த அமெரிக்க துாதுவா் நேற்று மாலை யாழ். ஊடக அமையத்தில் அச்சு ஊடகங்களின் செய்தியாளா்கள் குழுவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது யாழ்.மாவட்டம் உள்ளடங்கலாக வடமாகாணத்தில் திட்டமிட்டவகையில் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள், தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஊடாக மக்களுடைய காணிகள் பறிக்கப்படும் சம்பவங்கள், மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகள் குறித்து ஊடகவியலாளா்கள் அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனா். 

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவா்  அலெய்னா பி ரெப்லிட்ஸ் இவ்வாறான விடயங்களை தமக்கு தெரியப்படுத்தியமைக்காக ஊடகவியலாளா்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்து தாம் அடையாளப்படுத்தியுள்ள விடயங்களுடன் சோ்த்து இவ்வாறான விடயங்கள் தொடா்பாகவும் பொருத்தமான சந்தா்ப்பம் ஒன்றில், அரசாங்கத்துடன் நிச்சயமாக பேசுவேன் எனக் கூறியதுடன், மேற்படி அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் மற்றும் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைள், சிங்களக் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளா்கள் வெளிப்படுத்திய ஆவணங்களையும் ஆா்வத்துடன் பார்வையிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33