“ இந்து ஆல­யங்­களில் இடம்­பெறும் மிரு­க­பலி தடை­செய்­யப்­பட வேண்டும் ”

Published By: Priyatharshan

12 Apr, 2016 | 09:58 AM
image

இந்து ஆல­யங்­களில் இடம்­பெறும் மிரு­க­பலி செயற்­பா­டுகள் தடை­செய்­யப்­பட வேண்டும். எங்கள் சமயம் அன்பை போதிக்­கின்­றது. அன்பு தான் உயர்ந்­தது. மற்­ற­வர்­களை அன்­பாக மதிக்க வேண்டும் என யாழ். மாவட்ட அர­சாங்க அதிபர் நாக­லிங்கம் வேத­நாயகன் தெரி­வித்தார்.

அள­வெட்டி சைவ வாலிபர் சங்­கத்தின் 99 ஆவது ஆண்டு பொதுக் கூட்­டமும் பரி­ச­ளிப்பு நிகழ்வும் ஞாயிற்­றுக்­கி­ழமை மகா­ஜன சபை மண்­ட­பத்தில் அள­வெட்டி சைவ வாலிபர் சங்­கத்­த­லைவர் இ.நாகேந்­திரம் தலை­மையில் இடம்­பெற்­றது. 

இந்­நி­கழ்­விலில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

பெரும்­பா­லான சங்­கங்கள் தோன்றி குறிப்­பிட்ட காலத்­தினுள் அழிந்து விடு­கின்­றன. ஆனால் அள­வெட்டி சைவ வா­லிபர் சங்கம் 99 ஆண்டு நிறைவு கண்டு சிறப்­பான செயற்­பா­டு­க­ளினை எமது சமூ­கத்­திற்கு வழங்கி வரு­கின்­றது.சைவத் தமி­ழோடு தொடர்­பு­பட்ட பல விட­யங்கள் அழிந்து கொண்டு செல்­கின்­றன. சைவத்தின் தொன்­மை­யினை விளங்­கா­­த­வர்­க­ளாக எம்மில் பலர் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இன்­றைய சூழ்­நி­லையில் அற­நெறி வகுப்­புக்கள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. இன்று கோவில்­களில் தோன்றும் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­துதான் பெரும் சவா­லாக உள்­ளது. பொது நோக்­கிற்­காக செயற்­படு கின்ற தன்மை சமூக மட்­டத்தில் குறைவ­டைந்து செல்­கின்­றது. நல்ல செயற்­பா­டு­க­ளினை முன்­னெ­டுக்­காமல் தீய செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வது மன­வே­தனையை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

சைவ­வா­லிபர் சங்கம் எம் மண்­ணிற்கு பெருமை தரு­கின்­றது. பல இளை­ஞர்­களை சமயப் பணி­சார்ந்து உரு­வாக்­கி­யுள்­ளது. இன்று பல ஆல­யங்­களில் பக்­தர்கள் குறை­வ­டைந்து இயந்­தி­ரங்கள் மூலம் இசைக்­க­ரு­விகள் இசைக்­கப்­ப­டு­கின்­றன. எமது மதம் சுதந்­தி­ரத்­தினை கொண்­டது.

சமூ­கத்தில் குற்றச் செயல்கள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­தற்கு காரணம் ஆல­யங்­களில் அற­நெறி வகுப்­புக்கள் குறை­வ­டைந்து செல்­வ­தே­யாகும். எனவே இளம் பிள்­ளை­க­ளுக்கு அற­நெ­றிக்­க­ருத்­தினை ஊட்ட வேண்டும். இத­னூ­டாக சிறந்த பிர­ஜை­க­ளாக அவர்கள் திகழ்­வார்கள்.

இதே­வேளை இந்து ஆல­யங்­களில் உள்ள மிரு­க­பலி செயற்­பா­டுகள் தடை செய்­யப்­பட வேண்டும். எங்கள் சமயம் அன்பை போதிக்­கின்­றது. அன்பு தான் உயர்ந்­தது. மற்­ற­வர்­க­ளைஅன்­பாக மதிக்க வேண்டும். நாங்கள் அதி­காரம் காட்­டு­வது பண்­பற்­றது. மற்­ற­வர்­க­ளினை மதிப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும்.

நீதி­யற்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளினை காப்­பாற்­ற­ுப­வர்­க­ளாக தான் இன்று பலர் காணப்­ப­டு­கின்­றார்கள். இது மிக அநா­க­ரி­க­மான பண்­பாகும். இந் நிலை­மாற வேண்டும். இதற்கு காரணம் அற­நெறி வகுப்­புக்கள் குறை­வ­டைந்து செல்­வது தான். இளம் பிள்­ளை­க­ளுக்கு அற­நெ­றிக் ­க­ருத்­தினை ஊட்ட வேண்டும்.

எங்­க­ளு­டைய பண்புகள் பாரம்பரியங்களினை இழக்க முடியாது.சைவ வாலிபர் சங்கம் நீண்ட காலம் இயங்க வேண்டும். சைவ விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்-டும். அத்துடன் பாராட்டு என்பது சிறந்த விடயம். எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்களினை நாம் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56