இராணுவ அதிகாரி மீது பெண் அரசியல்வாதி பாலியல் புகார் - அமெரிக்காவில் சம்பவம்

Published By: Daya

07 Mar, 2019 | 05:01 PM
image

அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியபோது இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக  பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பாராளுமன்ற செனட் சபை உறுப்பினர் மார்தாமெக்சலி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் சபை (எம்.பி.) உறுப்பினராக இருப்பவர் மார்தாமெக்சலி. இவர் அரிசோனா மாகாணத்தில் இருந்து 2ஆவது முறை குடியரசு செனட் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கெனவே அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். 18 வயதில் விமானப்படையில் சேர்ந்த அவர் 26 ஆண்டுகள் பணியாற்றினார். இறுதியாக கெனெல் அதிகாரியாக இருந்தார்.

2010இல் ஓய்வு பெற்றார். அதன்பிறகு அரசியலில் இணைந்த  இவர் செனட் உறுப்பினராக இருக்கிறார். அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஏற்கெனவே புகார்கள் இருந்தன.

2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் 10 சதவீதம் பெண்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கு நடக்கும் தவறுகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க ஆயுத படைகள் செனட் துணை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

அதில் உறுப்பினராக உள்ள மார்தாமெக்சலி கூட்டத்தில் கலந்து கொண்டபோது,  விமானப்படையில் இருந்தபோது தனக்கு மேல் உள்ள அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். 

அந்த நேரத்தில் புகார் தெரிவித்தால் பல சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நான் புகார் தெரிவிக்காமல் மௌனம் காத்தேன். ஆனாலும் நடந்த சம்பவங்களை சிலரிடம் நான் கூறினேன். ஆயுதப்படைகளில் இது போல நடக்கும் தவறுகளை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13