கர்ப்பிணித் தாய்மார்களே வீட்டு வேலை­களை செய்­வது, சிறு உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொள்­வதன் மூலம் பிர­ச­வத்தின் போது ஏற்­படும் சிக்­கல்­களை தவிர்க்­கலாம்.

* கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்­க­ளுக்கும் ஏற்ற இறக்­க­மான மன­நிலை இருக்கும். அதில் சில நேரங்­களில் மிகவும் மன வேத­னையை சந்­திக்க நேரிடும். இதனை தினமும் வாக்கிங் செல்­வதன் மூலம் சரி­செய்­யலாம். எப்­ப­டி­யெனில் வாக்கிங் மேற்­கொள்­வதன் மூலம் மூளையில் நல்ல மன­நி­லையை உணர வைக்கும் எண்­டோர்­பின்கள் வெளி­யி­டப்­படும்.* பொது­வாக கர்ப்ப காலத்தில் மலச்­சிக்கல் பிரச்­சி­னையை சந்­திக்க வேண்­டி­யி­ருக்கும். ஆனால் வாக்கிங் மேற்­கொள்­வதால், இந்த மலச்­சிக்கல் பிரச்­சினை குறையும். எனவே தினமும் 15-20 நிமிடம் வாக்கிங் மேற்­கொள்­ளுங்கள்.

* கர்ப்­பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகுந்த சோர்­வையும், பல­வீ­னத்­தையும் பெண்கள் சந்­திப்­பார்கள். இக்­கா­லத்தில் போதிய அளவில் ஓய்வை எடுக்க வேண்­டி­யது மிகவும் அவ­சியம். ஆனால் அள­வுக்கு அதி­க­மாக ஓய்வு எடுப்­பது நல்­ல­தல்ல. எனவே சிறு தூரம் நடைப்­ப­யிற்­சியை மேற்­கொள்­வதால் சோர்வு தடுக்­கப்­பட்டு, உடல் ஆற்­றலும் தக்க வைக்­கப்­படும்.

* பொது­வாக கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதி­க­ரிக்கும். ஆனால் தினமும் வாக்கிங் மேற்­கொண்டால், இரத்த அழுத்­த­மா­னது சீரான அளவில் பரா­ம­ரிக்­கப்­படும்.

* கர்ப்­பி­ணிகள் தினமும் வாக்கிங் மேற்­கொண்டால், இடுப்பு தசை­களின் நெகிழ்­வுத்­தன்மை அதி­க­ரித்து, பிர­சவம் சுமூ­க­மா­கவும், மிகுந்த வலி­யின்­றியும் இருக்கும்.

* கர்ப்ப காலத்தில் பெண்­களால் நிம்­ம­தி­யான தூக்­கத்தைப் பெறு­வது என்­பது மிகவும் கடினம். ஆனால் தினமும் 30 நிமிடம் வாக்கிங் மேற்­கொள்­வதன் மூலம் நல்ல நிம்­ம­தி­யான தூக்­கத்தைப் பெறலாம்.

* கர்ப்­பி­ணிகள் தினமும் வாக்கிங் மேற்­கொள்­வதன் மூலம், தாயின் உடல் எடை சரி­யான அளவில் பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­தோடு, குழந்­தையின் எடையும் கட்­டுப்­ப­டுத்­தப்­படும். கர்ப்­பி­ணிகள் அள­வுக்கு அதி­க­மான உடல் எடை­யுடன் இருந்தால், பிரசவத்தின் போது சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆகவே குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுக்க வேண்டுமானால், தினமும் வாக்கிங் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.