விக்கினேஸ்வரனுக்கு தொடர்ந்து இடமளித்தால் நிலைமை மோசமாகிவிடும் 

Published By: MD.Lucias

12 Apr, 2016 | 09:17 AM
image

புலி­க­ளு­டனும் புலம்­பெயர் புலி அமைப்­பு­க்க­ளு­டனும் இணைந்து தேர்­தலில் வெற்றிபெற்­ற­வர்­க­ளுக்கு எப்­போதும் புலி­களால் எந்த அச்­சு­றுத்­தலும் இல்லை. அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சரத் பொன்­சேகா ஆகி­யோரின் உயி­ருக்கு எப்­போதும் அச்­சு­றுத்தல் இல்லை. ஆனால் புலி­க­ளுக்கு எதி­ராகச் செயற்­படும் மஹிந்த ராஜபக் ஷவிற்கே இன்று உயி­ருக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

பொது எதி­ர­ணி­யி­னரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பாது­காப்பு தொடர்பில் இன்று அர­சாங்கம் வேடிக்­கை­யாக கருத்­து­களை தெரி­வித்து வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் மஹிந்த ராஜபக் ஷவின் பாது­காப்பை நீக்­க­வேண்டும் என்ற கருத்­து­க­ளையே தெரி­வித்து வரு­கின்றார். ஆனால் உல­கத்தில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த தலை­வர்கள் எவரும் இன்று முன்னாள் தலை­வர்கள் என்ற நிலையில் வாழ­வில்லை. ரஷ்ய அதிபர் புட்டின் அவ்­வாறு இருந்­தாலும் இன்றும் அவர் அதிபர் என்ற முழு­மை­யான பாது­காப்பில் இருக்­கின்றார். ஆனால் முன்னாள் தலைவர் என்று இருக்கும் ஒருவர் மஹிந்த ராஜபக் ஷ மட்­டு­மே­யாகும். அவ்­வாறு இருக்­கையில் அவ­ருக்கு இன்றும் பல அச்­சு­றுத்­தல்கள் உள்­ளது.

ஆனால் ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா ஆகியோர் நாட்டில் எந்­த­வித அச்­சு­றுத்­தலும் இல்லை என கூறு­கின்­றனர். அவ்­வாறு கூறும் அனை­வரும் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலின் போது புலி­க­ளு­டனும் புலம்­பெயர் புலி அமைப்­பு­க­ளு­டனும் இணைந்தே தேர்­தலில் வெற்றி பெற்­றனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் வட­மா­காண சபையினரும் எப்­போதும் புலி­க­ளுடன் கைகோர்த்து அர­சியல் செய்­ப­வர்கள். இன்று அவர்­களின் கொள்­கையால் நாட்டில் பிரி­வி­னை­வாதம் பல­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. அவ்­வா­றன நிலையில் புலி­களை ஆத­ரித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சரத் பொன்­சேகா ஆகி­யோரின் உயி­ருக்கு எப்­போதும் அச்­சு­றுத்தல் இல்லை. ஆனால் ம­ஹிந்த ராஜபக் ஷ இலக்­கு­வைக்­கப்­பட்­டுள்ளார்.

புலி­களை அழித்து நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்­திய மஹிந்த ராஜபக் ஷ மக்­களின் முழு­மை­யான ஆத­ரவில் ஆட்­சி­ய­மைத்­தவர். அவர் நாட்டின் தேசிய பாது­காப்பு விட­யங்கள், அச்­சு­றுத்தல் என்­ன­வென நன்கு அறிந்­துள்ளார். ஆனால் இன்று ஆட்­சிக்கு வந்­த­வர்­க­ளுக்கு அந்த சம்­ப­வங்கள் தெரி­யாது. ஆரம்­பத்தில் இருந்தே புலி­க­ளுடன் உடன்­ப­டிக்கை செய்து நாட்டில் புலி­களை பலப்­ப­டுத்தி புலி­க­ளுடன் நட்­பு­றவை வைத்­தி­ருந்­த­வர்கள். அவ்­வாறு இருக்­கையில் அவர்­க­ளுக்கு தேசிய பாது­காப்பு என்­ன­வென்­பது தெரி­யாது.

இன்று வடக்கில் நடக்கும் சம்­ப­வங்கள், அர­சியல் நட­வ­டிக்­கைகள் என்­ன­வென்­பது மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரி­கின்­றது. வடக்கில் புலி­களின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. வடமாகாண சபையும் முதல்வரும் நாட்டில் பலமான பிரிவினைவாத கொள்கையை மேற்கொண்டு வருகின்றனர். இனிமேல் இவர்களுக்கு இடம்கொடுத்தால் நாட்டில் மீண்டும் ஒரு ஆயுத புரட்சி ஏற்படும். மக்கள் அதை தடுத்து நிறுத்த எம்முடன் கைகோர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40