சீனாவை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று அதன் காலடியில் விழுந்துள்ளனர் 

Published By: MD.Lucias

12 Apr, 2016 | 09:00 AM
image

சீனாவின் பொரு­ளா­தாரக் கொள்­கை­யை யும் வேலைத்­திட்­டங்­க­ளையும் எதிர்த்­த­வர்­க­ளுக்கு இன்று சீனாவின் கால­டியில் விழ­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. சீனாவை எதிர்த்தும் அவர்­களை நிரா­க­ரித் தும் தம்மால் எந்­த­வித பொரு­ளா­தார நட­வடிக்­கை­க­ளையும் கையாள முடி­யாது என்­பதை இன்று அர­சாங்கம் விளங்­கிக்­கொண்­டுள்­ளது என மஹிந்த ஆத­ரவு அணி­யினர் தெரி­வித்­தனர்.

எமது ஆட்­சியில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மேற்­கொண்ட வேலைத்­திட்­டங்­களை குறைகூறி­ய­வர்கள் இன்று

அதே வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­ததன் மூல­மாக மஹிந்த ராஜபக் ஷ சரியான திட்டங்களையே முன்னெடுத்தார் என்பது நிரூபித்­துள்­ளனர் எனவும் மஹிந்த அணியினர் குறிப்பிட்டனர்.

பொது எதி­ர­ணியால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்­தி­யாளர் சந்திப்பிலேயே பொது எதிரணியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியின் போது அப்­போ­தைய எதி­ர­ணி­யாக இருந்­த­வர்­க­ளுக்கு மஹிந்த மட்­டு­மல்ல சீனாவும் எதி­ரி­யா­கவே தெரிந்­தது. நாம் சீனா­வுடன் செய்­து­கொண்ட பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கைகள் மற்றும் அபி­வி­ருத்தி திட்­டங்கள் அனைத்தும் நாட்டை சீர­ழிக்கும் வகை­யி­லேயே தெரிந்­தது. அதேபோல் சீனாவின் காலணித்­துவ நாடாக இலங்கை மாறு­வ­தா­கவும், சீனாவின் பொரு­ளா­தார கொள்கை எமது நாட்டின் தேசிய பொரு­ளா­தார கொள்­கையை அழித்­து­விடும் எனவும் கூறி­னார்கள். ஆனால் இன்று இவர்கள் ஆட்­சிக்கு வந்­த­வுடன் சீனாவும் சீனாவின் வேலைத்­திட்­டங்­களும் நல்­ல­தாக தெரி­கின்­றன. குறிப்­பாக நாம் ஆரம்­பித்த கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி திட்டத்தை மோச­மா­ன­தாக தெரி­வித்­த­வர்கள் இன்று அதே வேலைத்­திட்­டத்தை முன்னெடுக்கின்றனர். அதேபோல் அம்­பாந்­தோட்­டையில் சீனாவின் தொழிற்­சாலை வலயம் அமைக்­கவும் அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.

ஆகவே அன்று சீனாவை எதிர்த்­த­வர்­க­ளுக்கு இன்று மீண்டும் சீனாவின் கால­டியில் விழ­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. சீனாவை எதிர்த்தும் அவர்­களை நிரா­க­ரித்தும் எம்மால் எந்­த­வித பொரு­ளா­தார நட­வைக்­கை­க­ளையும் கையாள முடி­யாது என்­பதை இன்று அர­சங்கம் விளங்­கிக்­கொண்­டுள்­ளது. ஆகவே எமது ஆட்­சியில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மேற்­கொண்ட வேலைத்­திட்­டங்­களை குறை கூறி­ய­வர்கள் இன்று அதே வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­ததன் மூல­மாக மஹிந்த ராஜபக் ஷவை சரி­யென நிரு­பித்­துள்­ளனர். ஆகவே இந்த ஆட்சி மாற்றம் எவ்­வாறு வந்­தது என்­பதும் மக்­க­ளுக்கு தெரிந்­துள்­ளது.

அதேபோல் ஜி 7 மாநா­டு­களில் கலந்­து­கொள்ள ஜனா­தி­பதி பய­ண­மா­கின்றார். அதன் பின்னர் மீண்டும் நாட்டில் இடைக்­கால பொரு­ளா­தார கொள்கை ஒன்றை சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­விக்­கின்­றனர். ஆகவே இப்­போது அந்த பொரு­ளா­தார கொள்­கை­யையும் முன்­வைத்தால் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் முன்­வைக்கும் மூன்­றா­வது பொரு­ளா­தார கொள்கையாகும். ஆகவே இந்த அரசாங்கம் தனது பொருளாதார கொள்கையில் நிலையான தன்மையில் இல்லை என்பது தெரிகின்றது. மக்களுக்கும் நாட்டுக்கும் ஏற்ற ஆட்சியை இவர்களால் முன்வைக்க முடியவில்லை. அதை அரசாங்கம் அடிக்கடி நிரூபித்து வருகின்றது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41