சிறிசேனவின் வேண்டுகோளை நிராகரித்தது அரசாங்கம்- ஜெனீவா தீர்மானத்திற்கு இணைஅனுசரணை

Published By: Rajeeban

06 Mar, 2019 | 03:18 PM
image

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தி;ற்கு இணை அனுசரணை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

 வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது

இணைஅனுசரனை வழங்கவேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அரசாங்கம் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது

இணை அனுசரணை வழங்குவதன் மூலம் நிலையான நீண்டகால நல்லிணக்க நடவடிக்கைகளிற்கான தனது அர்ப்பணிப்பையும் உறுதிப்பாட்டையும் அரசாங்கம் வெளிப்படுத்தும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

புதிய தீர்மானத்திற்கு இணைஅனுசரணை வழங்குவதன் மூலம் கடந்தகாலத்தின் தீர்மானத்திற்கான மேலதிக அவகாசத்தை கோரவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கும் விடயத்தில்  பிரிட்டனுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த தந்திரோபாயம் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக சர்வதேச யுத்தகுற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையை தவிர்க்கும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

2009 ம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அப்போதைய ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பான்கிமூனிற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் தொடர்ச்சியாகவே 2015 ம் ஆண்டின் தீர்மானமும்,அதன் பின்னரான நடவடிக்கைகளும் அமைந்துள்ளன எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களில் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தை அமைப்பது இழப்பீட்டிற்கான அலுவலகத்தை அமைப்பது உட்பட பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது இதன் காரணாமாக இலங்கை மக்கள் பொருளாதார நன்மைகளை  அனுபவிக்ககூடிய நிலையேற்பட்டுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19