ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.வி.சண்முகம் பரபரப்புத் தகவல்

Published By: Daya

06 Mar, 2019 | 02:36 PM
image

"நீரிழிவு நோயால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலை முழுவதும் இரத்தம் சிந்தியது எப்படி?" என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களிடையே அவர் தெரிவித்ததாவது:

 எந்த இரட்டை இலை சின்னத்தின் மூலம் வெற்றி பெற்றோமோ, அந்த சின்னத்தை அழிப்பேன் என்பவருடன் கூட்டணி வைத்துக் கொண்டு துரோகம் இழைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா சாதாரணமாக இறக்கவில்லை. கிராமத்தில் படிக்காதவனைக் கேட்டால் கூட இதைச் சொல்வான். ஒருவரை சாகடிக்க விஷம் கொடுக்க வேண்டியதில்லை. வெல்லம் கொடுத்தே சாகடிக்கலாம். இது கிராமத்தவருக்கும் தெரியும். அதைத்தான் இவர்கள் செய்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய்இருக்கிறது என்று தெரிந்து, வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்து, உயிருக்கு போராடி வரும் ஒருவருக்கு அல்வா கொடுத்திருக்கிறார்கள் என்றால் இவர்களை என்ன பண்ணலாம்? நோய் குறையாமல், முற்றி அவர்களை இயற்கையாக இறக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருந்திருக்கிறது.

இப்படித் திட்டம் போட்டே ஜெயலலிதாவை நம்மிடம்இருந்து பிரித்து விட்டார்கள்.

நன்றாக குணமாகி உடல்நிலை தேறி வரும்போது ஒருவருக்கு எப்படி மாரடைப்பு வரும்? மாரடைப்புவந்தால் எப்படி வைத்தியசாலை முழுவதும் இரத்தம் சிந்தப்பட்டிருக்கும். நாங்கள் அன்று அங்கிருந்தோம். 

சிலரை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் உண்மை வெளிவரும். 'பல வாய்ப்புகள், வசதிகள், அதிகாரம் இருந்தும் அந்த அம்மாவ கொடுமையா இப்படி கொன்னுட்டாங்களே!' என அரசு உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஆசி இருக்கும் வரை, தொண்டர் ஆதரவு இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17