சட்ட பூர்வமான கார்பன் பரிசோதனை அறிக்கை தயார்..: சட்ட வைத்திய அதிகாரி சமிந்த

Published By: J.G.Stephan

06 Mar, 2019 | 12:38 PM
image

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின்  கார்பன்  பரிசோதனை அறிக்கையானது சட்ட பூர்வமாக இன்றைய தினம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (06.03.2019) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில் அமேரிக்காவில் உள்ள புளோரிடவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

குறித்த பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் சட்ட ரீதியாக கடந்த நாட்களில் கிடைக்க பெறாத  நிலையில் இன்றைய தினம் குறித்த அறிக்கையானது சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு கிடக்கப் பெற்றுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

 அதே நேரத்தில் குறித்த அறிக்கை தொடர்பான எந்த விபரங்களையும் தன்னால் வழங்க முடியாது எனவும் அவ்வறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் குறித்த அறிக்கையினை மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இது குறித்த மனித புதை குழியின் அகழ்வு பணிகளை தொடர்சியாக மேற்கொள்வதா?இல்லையா? என்பது தொடர்பாக நீதவான் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலக பிரதிநிதிகளுடன்  கலந்துரையாடிய பின்னரே முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார் .

இதுவரை குறித்த மனித புதைகுழியில் இருந்து 335 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 318 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50