தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அமுலுக்கு வருமுறையில்  வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட சோதனை நடவடிக்கை தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரதேசங்களை உள்ளடக்கியவாறு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றில் 126 பேர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முச்சக்கர வண்டி சாரதிகள் 68 பேர் மற்றும் பாரவூர்தி சாரதிகள் 7 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.