(க.கிஷாந்தன்)


ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் தோட்ட ஜீ.டி பிரிவின் தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரி இத்தோட்ட தொழிலாளர்கள் 100 பேர் இன்று காலை தொழிற்சாலை காரியலாயத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் செனன் தோட்ட ஜீ.டி பிரிவின் தேயிலை மலை ஒரு வருட காலமாக பராமரிக்காமல் காடாக காணப்படுகின்றதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை , தேயிலை செடிகளில் விஷ பூச்சிகள், பாம்புகள் காணப்படுவதால் இத்தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு செல்ல முடியாத அச்சத்தில் உள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே, தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் நலன் கருதியும் தேயிலை செடியின் பாராமரிப்பை முறையாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.


அத்தோடு கடந்த ஒரு வருடம் தோட்டத்தில் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தி வேலைகளை தோட்ட நிர்வாகம் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என வழியுறுத்தியும் காட்டு மிருகங்கள் மற்றும் குளவி தொல்லைகள் போன்றவற்றிலிருந்து தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்து கோஷங்களை எழுப்பி சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.