சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் கிளிநொச்சி திருவையாற்றில் ஒருவர்  நேற்று கைதுசெய்யபட்டுள்ளார்.

கிளிநொச்சி பகுதியிலுள்ள திருவையாற்றில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 23 வயதுடைய விஜயகுமார் கேதீஸ்வரன் என தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருடன் பல்வேறு வழிகளில் தொடர்புகளை பேணிவந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுவரும் நிலையில் மேற்படி நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.