இன்று திங்­கட்­கி­ழமை மகா சிவ­ராத்­திரி விரத நாள். இந்­துக்கள் வணங்­கு­கின்ற சிவ­பி­ரானை நோக்­கிய சிவ­வி­ர­தங்­களுள் சிவ­ராத்­திரி விரதம் அதி­வி­சே­ஷ­மா­னது.

சிவ­ராத்­திரி அன்­றுதான் அன்னை உமா­தேவி சிவ­பெ­ரு­மானை பூஜித்து வழி­பட்டாள். அதனால் நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவ­பெ­ரு­மானை வழி­ப­டு­வது சிறந்த பல­னைத்­தரும். சிவ­ராத்­திரி என்ற சொல் சிவ­னு­டைய ராத்­திரி. சிவ­மான ராத்­திரி, சிவ­னுக்கு இன்­ப­மான ராத்­திரி என்று பல வகைப் பொருளை தரு­கி­றது.

சிவ­ராத்­திரி 4 ஜாமங்­க­ளிலும் ஒருவர் செய்யும் பூஜை. அவரை முக்தி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும்.

சூரியன், முருகன், மன்­மதன், இந்­திரன், எமன், சந்­திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்­படி சிவ­ராத்­திரி விரதம் இருந்து பேறு பெற்­றுள்­ளனர். சிவ­ராத்­தி­ரி­யன்று ஆல­யங்­க­ளுக்கு செல்ல முடி­யா­த­வர்கள் வீட்டில் இருந்­த­ப­டியே சிவ­பெ­ரு­மா­னுக்கு மனதில் அபி­ஷேகம் செய்து சிவனை வழி­ப­டலாம்.

எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்­றவை கூட சிவ­பூ­ஜையால் மோட்சம் அடைந்­துள்­ளன. சிவம் என்ற சொல்­லுக்கு மங்­களம் தரு­பவர் என்று பொருள். எனவே எந்த அள­வுக்கு ஒருவர் சிவ.. சிவ.... என்று உச்­ச­ரிக்­கி­றாரோ அந்த அள­வுக்கு அவர் நன்மை பெறுவார்.

சிவ­ராத்­தி­ரி­யன்று திரு­விடை மருதூர் மகா­லிங்க சுவா­மியை வழி­பட்டால் மறு­பி­றவி கிடை­யாது. சிவ­ராத்­திரி தினத்­தன்று தியா­க­ராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்­றி­ருக்­கும் தலங்­களில் தரி­சனம் செய்தால் பாவங்­களில் இருந்து விடு­படலாம்.

கஞ்­ச­னூரில் ஒரே பிர­கா­ரத்தில் அடுத்­த­டுத்து 2 தெட்­சி­ணா­மூர்த்­திகள் உள்­ளனர். சிவ­ராத்­தி­ரி­யன்று இவர்­களை வழி­பட்டால் சிவ­ஞானம் எளிதில் கிடைக்கும் என்­பது நம்­பிக்கை. சிவ­பெ­ருமான் லிங்­க­மாக உரு­வெ­டுத்த தினமே சிவ­ராத்­திரி என்று ஒரு கருத்து உண்டு. திரு­வ­திகை தலத்தில் உள்ள வீரட்­டா­னேஸ்­வ­ரரை சிவ­ராத்­திரி தினத்­தன்று வழி­பட்டால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

பண்­ட­ரி­பு­ரத்தில் உள்ள பாண்டுரங்கன் சங்­கர  நாரா­யண வடிவம் என்­பார்கள். பாண்டு­ரங்கன் தலையில் கிரீ­டத்­துக்கு பதில் பாண லிங்கம் இடம் பெற்­றுள்­ளது. சிவ­ராத்­திரி தினத்­தன்று பாண்­டு­ரங்­க­னுக்கு நிவே­தனம் செய்­வ­தில்லை. அவரும் அன்று சிவ­ராத்­திரி விரதம் இருப்­ப­தாக சொல்­லப்படுகிறது.

மகா சிவ­ராத்­திரி தினத்­தன்று அபி­ஷே­கத்­துக்கு உரிய பொருட்­களை வாங்கி ஆல­யத்­துக்கு கொடுப்­ப­வர்கள் பர­மா­னந்த நிலையை அடை­வார்கள் என்­பது ஐதீகம். ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்­டப்­பள்­ளியில் மட்­டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவ­ராத்­திரி தினத்­தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்­கியில் தரி­சனம் செய்­யலாம்.

சிவ­ராத்­திரி தினத்­தன்று சிவ­பு­ராணம், தேவாரம் மற்றும் திரு­மு­றைகள் படிப்­பது மிகவும் நல்­லது. திரு­வை­காவூர் ஈசனை சிவ­ராத்­திரி தினத்­தன்று வழி­பட்டால் மரண பயம் நீங்கும். கருட புராணம், கந்­த­பு­ராணம், அக்னி புராணம் உள்­ளிட்ட பல்­வேறு நூல்­களில் சிவ­ராத்­திரியின் மகிமை பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சிவ­ராத்­திரி தினத்­தன்று மாலை சூரியன் மறைந்­ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உத­ய­மாகும் வரை சிவ பூஜை செய்­ப­வர்­க­ளுக்கு எல்லா பாக்­கி­யங்­களும் கிடைக்கும்.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும் பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது. சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.